நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து -Nechayamaga Unnai Asirvathithu
நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து -Nechayamaga Unnai Asirvathithu
நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து பெருகவே பெருக பண்ணுவேன்
நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகிடுவாய்
உன் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்
உன் துக்க நாட்கள் முடிந்து போகும்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.
நீர்பாய்ச்சலான தோட்டமாய் செழிப்பாக மாறப்பண்ணுவேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியாக்குவேன்
உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன் நீ கீழாகாமல் மேலாகிடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.
பட்சித்த வருஷங்களின் விளைச்சல்களை திரும்ப தருவேன்
நன்மையினாலே உன்னை திருப்த்திபடுத்தி சந்தோஷத்தால் நிறைத்திடுவேன்
உன் பெயரை பெருமை படுத்துவேன் நீ ஆசீர்வாதமாய் வாழ்ந்திடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.
உன் நடுவில் வாசம்பண்ணுவேன் உன்னை கண்மணி போல் காத்திடுவேன்
என் நாவினால் சொன்னவைகளை என் கரத்தினால் செய்து முடிப்பேன்
ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பேன்நீ கோடா கோடியாய் பெருகுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.