நித்தமும் சிந்தித்து – Niththamum Sinthithu
நித்தமும் சிந்தித்து – Niththamum Sinthithu
பல்லவி
நித்தமும் சிந்தித்துச் சிந்தித் தேசுவின் நிருமலப் பதம் சேராய்,
நெஞ்சமே, அவர் தஞ்சம் உய்ய நீ கெஞ்சிக் கெஞ்சியே வாராய்.
சரணங்கள்
1 எத்திசையும் இறைமை செலுத்திய கர்த்தர் உன் பவம் போக்க
இத்தரையில் ஓர் ஏழையாய் வந்ததைப் பத்தியாய் உன்னில் காக்க,-நித்
2. கெத்துசேமினித் தோட்டத்திலே அவர் பத்தியாய் ஜெபம் தொடங்கி
ரத்த வேர்வை யோடாத்துமப்பாடு சகித் தகோரத்தால் நடுங்கி,-நித்
3.சிலுவையை நைந்த உடலில் சுமத்தி, வலிமையாகவே நடத்தி,
கொலுகதாவினில் கொண்டுபோன துய்யுலகுக்கு உனைக் கடத்த, -நித்
4.பார மரத்தில் அவர் கை காலெல்லாம் சேரவே அறைந்ததையும்,
கூர் ‘சவளக் குத்தால் விலாவினில் ‘சோரி நீர் பிறந்ததையும் -நித்
5. பகலும் இருள, திரையும் கிழிய ‘நகமும் நடுங்கிப் பிளக்க
அகிலம் அதிர, அவர் மரித்ததைச் சகல பேர்க்கும் நீ விளக்க,-நித்
Niththamum Sinthithu song lyrics in English
Niththamum Sinthithu Sinthi Theasuvin Nirumala Patham Searaai
Nenjamae Avar Thanjam Uiya Nee Kenji Kenjiyae Vaaraai
1.Eththisaiyum Iraimai Sealuthiya Karthar Un Pavam pokka
Iththaraiyil Oor Yealaiyaai Vanthathai Bakthiyaai Unnil Kakka
2.Keththuseamini Thottaththilae Avar Bkthiyaai Jebam Thodangi
Raththa Vearvai Yoddathumapaadu Sakitha Koraththaal Nadungi
3.Siluvaiyai Naintha Ulalil Sumathi Valimaiyagavae Nadaththi
Kolukathavini Kondu Pona Thiyulagukku Unai Kadaththa
4.Paara Maraththil Avar Kai Kaalamellaam Searavae Arainthathiyum
Koor Savala Kuththaal Vilavinil Sorai Neer Piranthathaiyum
5.Pagalum Irula Thirayum kiliya Nagamum Nadungi Pillakka
Agilam Athira Avar Marithathai Sagala Pearkkum Nee Vilakka