நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்-நான்
கிருபை கிருபை மாறாத கிருபை
1. கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களிலே அமரச் செய்தீர்
2. கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக
சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே
3.தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால்
4.ஜீவனைப் பார்க்கிலும் மேலானது
உந்தன் கிருபை மேலானது
அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்
ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன்
5.காலை தோறும் புதியது
உந்தன் கிருபை புதியது
காத்திருப்பேன் உம் பாதத்தில்
களிகூர்வேன் உம் கிருபையில்
6.இயேசுவை அறிகிற அறிவினாலே
அமைதியும் கிருபையும் பெருகிடுதே
நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்
நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும்
7.தாயின் வயிற்றில் இருந்தபோதே
பாரித்தெடுத்தீரே, அழைத்தீரே
வியை அளித்து, அற்புதம் செய்து
ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர்