நீங்காத உறவில் நிறைவான – Neengatha Uravil Niraivaana
நீங்காத உறவில் நிறைவான – Neengatha Uravil Niraivaana
நீங்காத உறவில் நிறைவான உணர்வில்
நீங்காத உறவில் நிறைவான உணர்வில்
இறையே உன் நிழல் நாடினேன்
அடியேன் என் நிலை மாறினேன்
உன்னோடு கை கோர்த்து நான் செல்லும் பாதை
அழகானது தினம் அழகானது
உன் கண்ணோடு கண்சேர்த்து நான் பார்க்கும் பாதை
புதிதானது தினம் புதிதானது
உனையேற்று கொண்டேன் உருமாற்றம் கண்டேன்
உன்னில் உலகை புதிதாக கண்டேன்
1, நிதம் காணும் வானம் நிலையான போதும்
அதில் தோன்றும் மேகம் இருள்கோலம் மாறும்
மாற்றங்களை மனம் தேடுதே
உந்தன் வார்த்தைகளே உரமானதே
இறைவா இறைவா வாழ்வு உன்னில் வழமானதே
2, ஓய்வின்றி நடக்கும் காற்றாக உழைப்பேன்
மாற உன் அன்பை பாரெல்லாம் சேர்ப்பேன்
உலகமெல்லாம் உறவாகுமே
மலரும் இதயமெல்லாம் அருள் சேருமே
இறைவா இறைவா வாழ்வு உன்னில் வழமானதே