நீர் தந்த நாளில் -Neer thantha naalil
நீர் தந்த நாளில் -Neer thantha naalil
நீர் தந்த நாளில்
உள்ளம் மகிழ்கிறேன்
நீர் தந்த வாழ்வை
எண்ணியே துதிக்கிறேன் (2)
மனம் நோகச் செய்த என்னையும்
அழைத்த தெய்வமே
மறுவாழ்வு தந்து என்னையும்
அனணத்த இயேசுவே (2)
வாழ்நாளெல்லாம்
நன்றி சொல்லுவேன்
வாழும் நாட்களை
உமக்காய் வாழுவேன் (2)
புது ஜீவன் தந்து என்னையும்
மகிழச் செய்தீரே
நிறைவான உந்தன் ஆவியால்
நடத்தி வந்தீரே (2)
உம் அன்பினை
எங்கும் சொல்லுவேன்
நெஞ்சங்களை
உமக்காய் வெல்லுவேன் (2)
-நீர் தந்த நாளில்