பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும் -Parisuthapaduthum Deva Entrum
பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும் -Parisuthapaduthum Deva Entrum
பரிசுத்தப்படுத்தும் தேவா – என்றும்
பரிசுத்தப்படுத்தும் தேவா
பாங்காய் உம் பாதை நான் நடக்க
என்னைப் பரிசுத்தப்படுத்தும் தேவா
1. உம் அன்பை உணராமல்
உம் முகம் பாராமல்
தீயனாய் அலைகின்றேன் – நீர்
எந்தனை ஏற்றுக்கொண்டு – பரிசுத்தப்படுத்தும்
2. உம் சத்தம் கேளாமல்
உம் பாதை நடக்காமல்
வழி தவறுகிறேன் – நீர்
நேர் வழி காட்டி என்னை – பரிசுத்தப்படுத்தும்
3. உம் அருள் அறியாமல்
உம்மோடு இணையாமல்
சாத்தானின் வன் பிடியில் – என்றும்
சிக்கித் தவிக்கும் என்னை – பரிசுத்தப்படுத்தும்