பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே
பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே
பறக்குதே சிலுவைக்கொடி பறக்குதே
காடு மேடு வீடு பட்டித் தொட்டி நகரம்
அகில உலக தேசம் இயேசுவுக்கே சொந்தம்
1. கேட்குதே எங்கும் தொனி கேட்குதே
அல்லேலூயா (4)
ஜீவ வார்த்தை என்றும் வழி நடத்தும் உன்னை
வேத வாக்கு ஒன்றும் மாறுவதும் இல்லை – பறக்குதே
2. வீசுதே அருள் மணம் வீசுதே
அல்லேலூயா (4)
இயேசு ராஜன் சேனை ஓசை முழக்கத்தோடு
சிலுவைக்கொடி ஏந்தி பவனியாக செல்லும் – பறக்குதே
3. ஊற்றுதே ஆவி மழை ஊற்றுதே
அல்லேலூயா (4)
ஆடிப்பாடும் கூட்டம் ஆர்ப்பரிக்கும் வேளை
ஆனந்தத்தில் மகிழ உள்ளமெல்லாம் பொங்க – பறக்குதே