பலவீனன் என்று சொல்லாயாக – Belaveenan Entru Sollayaga Lyrics

பலவீனன் என்று சொல்லாயாக பலப்படுத்தும் தேவன் உன்னோடு
கனவீனன் என்று சொல்லாயாக கனப்படுத்தும் தேவன் உன்னோடு
சரணம்
கோலியாத்தின் கோஷம் பெருகினதே
இஸ்ரவேல் ராஜா கலங்கினானே
சிறியவன் தாவீதை கொண்டு
பெரிதான இரட்சிப்பை கர்த்தர் கொடுத்தார்
கலங்கிடாதே திகைத்திடாதே
கன்மலை திறந்து தண்ணீரை கொடுத்த
பராக்கிரம தெய்வமே நம் பக்கம்
பலவீனன் என்று சொல்லாயாக பலப்படுத்தும் தேவன் உன்னோடு
கனவீனன் என்று சொல்லாயாக கனப்படுத்தும் தேவன் உன்னோடு
யோர்தான் கரை புரண்டோடிடவே
இஸ்ரவேல் கூட்டத்தார் புறப்பட்டனர்
தண்ணீரை குவியலாய் சேர்த்து
நடுப்பாதை உண்டாக்கி கர்த்தர் நடத்தினார்
பயந்திடாதே ஓய்ந்திடாதே
எரிகோவின் மதிலை விழுந்திடச் செய்த
அற்புத தேவனே நம்மோடு
பலவீனன் என்று சொல்லாயாக பலப்படுத்தும் தேவன் உன்னோடு
கனவீனன் என்று சொல்லாயாக கனப்படுத்தும் தேவன் உன்னோடு
மீதியானிய சேனை நெருங்கிட்டதே
கிதியோனின் படைகள் முன் சென்றதே
எக்காளங்கள் ஊதி பானைகள் உடைத்து
கர்த்தரால் ஜெயத்தை பெற்றனரே
சோர்ந்திடாதே தயங்கிடாதே
கேரீத்தின் தண்ணீர் வற்றின போதும்
தாகம் தீர்த்த கர்த்தர் நம்மோடு
பலவீனன் என்று சொல்லாயாக பலப்படுத்தும் தேவன் உன்னோடு
கனவீனன் என்று சொல்லாயாக கனப்படுத்தும் தேவன் உன்னோடு
எமோரிய ராஜாக்கள் எதிர்த்தனரே
யோசுவாவின் படைகள் எதிர்கொண்டன
கிபியோன் மேல் சூரியனையும் ஆயலோன் மேல் சந்திரனையும்
நிறுத்தி ஜெயம் கொடுத்த தேவன் நம்மோடு
மனமுடைந்திடாதே பின்வாங்கிடாதே
யேசபேலின் அக்கிரமத்தை முழுவதுமாய் சங்கரிக்க
யெகூவை அபிஷேகித்த கர்த்தர் நம்மோடு