பாடுவேன் போற்றுவேன் – Paaduvean Pottruvean Vazhvaen Umakaaga
பாடுவேன் போற்றுவேன்
உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
உம்மை நம்புவேன் நேசிப்பேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தேன்
பாவத்திலிருந்து மீட்டீரே
உலகத்தின் பின்னால் சென்றிருந்தேன்
பேர் சொல்லி என்னை அழைத்தீரே
இயேசுவே என் இயேசுவே
இனி நான் வாழ்வது உமக்காக -2
தேடுவேன் நாடுவேன்
உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
உம்மை ஆராதிப்பேன்
துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன்
நன்மைகள் என்றும் செய்பவரே
நன்றியுடன் நான் பாடிடுவேன்
அதிசயமாய் என்னை நடத்தினீரே
உம் புகழை என்றும் பாடிடுவேன்
Rap
என்னை காக்க மண்ணில் பிறந்தார்
என்னை மீட்க நீர் வந்தீர்
என் பாவம் யாவும் போக்க
எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்
உம்மை போல் தெய்வம் இல்லை
உன் அன்பிற்கு இணையே இல்லை
எனக்காய் உம்மைத் தந்தீர்
சாத்தானின் தலையை வெல்வீர்
தாயைப்போல் என்னை நேசிக்கும் தேவன்
உன்னையும் நேசிப்பார் வா வா
தங்கமோ வெள்ளியோ தேவையில்லை
உந்தன் உள்ளத்தை மட்டும் நீ தா தா
எந்நாளும் என்றென்றும்
என் வாழ்க்கை உமக்காக
எங்கேயும் எப்போதும்
என் வாழ்வே இயேசுவுக்காக