பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics
பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics
1. பாவஞ் செய்யாம லின்றைக்கு
தேவரீர் காத்திடும்
என்னி லென்றும் உம தாவி
தந்து வசித்திடும்
2. எல்லாப் பாவத்தினின்றும் நீர்
வல்லமையாய் மீட்பீர்;
காத்துக் கொள்வீர் உம் தாசனை
சாத்தான் தொடாமலே
3. ஜீவன் போம் வரையும் காக்கும்
தேவன் நீரல்லவோ!
சக்தியற்ற ஆத்துமாவை
சக்தன் நீர் காத்திடும்!
4. நம்பி இதோ பணிகிறேன்
உம் திருப் பீடத்தில்
தீயனின் வினையினின்று
நாயன் நீர் காத்திடும்!
5. உம் கரம் என் அடைக்கலம்
அம்பரன் என் அரண்
தற்காத்திடும் என் ஆத்துமாவை
தற்பரா நீர் தாமே!