பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு
பாவம் என்னைத் தொடர்ந்தாலும் – இயேசு
தேவா, உம்மை மறவேனே
1. செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் – அதை
செய்யாமல் இருந்திட பலமுமில்லை
மெய்யாக உம் துணை வேண்டுமய்யா – எந்தன்
அய்யா நின் பிள்ளை நானல்லவோ – பாவம்
2. உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு – ஆனால்
வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன்
உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் – எந்தன்
உடலையே உமக்கென தந்துவிட்டேன் – பாவம்
3. மன்னவா உம்மிடம் ஓடி வந்தேன் – பாவ
மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன்
மன்னிப்பு வழங்கினால் போதாது – என்னை
மாற்றாமல் போய்விடில் வாழ்வேது – பாவம்