பாவியே ஜீவ ஊற்றண்டை வா
1. பாவியே ஜீவ ஊற்றண்டை வா
மேவியே ஜீவனடைவாய்
கூவியே இயேசு கூப்பிடுகிறார்
தாவியே ஓடி நீ வா
பல்லவி
தாமதமே செய்திடாதே
தருணமே இதை விடாதே
தற்பரன் இயேசு உன்னை இரட்சிப்பார்
பொற்பதம் ஓடியே வா
2. உள்ள நிலைமையுடனோடிவா
கள்ள உலகை விட்டு
தள்ள மாட்டாரே எப்பாவியையும்
வல்ல இயேசு நாதரே – தாமதமே
3. பாவியொருவன் திரும்பும் போது
மேவிகள் அவர் முன்னால்
காவியங்கள் கொண்ட பாடல்களை
கூவியே கூப்பிடுகிறார் – தாமதமே
4. உண்மையாய் இயேசுவை ஏற்பவரே
வெண்மையாக மாற்றுவார்
நன்மையை நாடெங்கும் செய்திட்டவர்
உன்னையும் அழைக்கிறார் – தாமதமே