பாவி பரமசுதன் தாவி – Paavi Parama suthan Thaavi

Deal Score+1
Deal Score+1

பாவி பரமசுதன் தாவி – Paavi Parama suthan Thaavi

பல்லவி

பாவி பரமசுதன் தாவிஉனைத் தயவாய் கூவி
அழைக்கிறார் இதோ வாராயோ – ஓ

அனுபல்லவி

பூவின் பாவப் பாரத்தை மேவிச் சுமந்து தீர்த்த
தேவாட்டுக்குட்டி இதோ பார் பார் பார் – ஓ பாவி

1. ஜென்மபாவத்தினோடு கன்மபாவமு முன்னை
சின்னப்படுத்திதைப் பார் பார் பார் – உனின்
நன்மை ஏதுமில்லாத தன்மை அதை அறிந்து
நன் மணவாளனேசுவைச் சேர் சேர் சேர் – ஓ பாவி

2. சிற்றொளி தீபம் சுற்றிப்பறந்து நிற்கும்
சிற்றுயிர் புட்கள் தனைப்போலவே – உனைச்
சுற்றி உலகளிக்கும் சிற்றின்பமான சுகம்
தொற்றிப் பாவி நீ கெட்டாய் சாலவே – ஓ பாவி

3. எத்தனை தானதர்மம் நித்தம் பூசைபலிகள்
அத்தனையாலும் பாவம் தீராதே – பரி
சுத்தன் ஏசுவின் திருரத்தம் பாவக்கறையை
சுத்திகரித்திடும் நீ சேராயோ – ஓ பாவி

4. தந்தைப் பிதா தமது சொந்தக் குமாரன் தனை
தந்து உலகினை புரந்தாரே – நீயும்
சொந்த சேயனாகவே உந்தன் விசுவாசத்தால்
சொந்தம் உண்டாகுமென்று பகர்ந்தாரே – ஓ பாவி

5. நீடிய பாவமன்னிப்போடுமே பரிசுத்தம்
நித்திய ஜீவனுமுன் பங்காமே – இன்பம்
நாடி ஜீவகிரீடம் சூடிப் பராபரனைப்
பாடி மகிழ்வதுமுன் பங்காமே – ஓ பாவி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo