புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு – Puthuvazhuv namakku puthuvazhuv
புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு – Puthuvazhuv namakku puthuvazhuv
பல்லவி
புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு
பெரு வாழ்வு கிறிஸ்து தரும் வாழ்வு
1. பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு
இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு
இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும்
மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார்
2. கல்லறை உலகினில் பல உண்டு – அவை
சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு
வல்லவர் இயேசுவின் கல்லறையோ – அவர்
இல்லையே என்னிடம் என்றிடுதே
3. இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர்
நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி
நாசமோ மோசமோ நமக்கில்லை – விசு
வாசிகள் தமக்கு இறப்பில்லை