மன்னியும் தேவா மன்னியுமே
மன்னியும் தேவா மன்னியுமே
என்னை ஒரு விசை மன்னியுமே
உம்மை விட்டு விலகியே நின்றேன்
என்னை மன்னியுமே 2
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
பொறுமை அன்பு உடையவரே 2
மனமுடைந்து நான் மடியும் பொழுது
அருகினில் வந்தென்னை அணைப்பவரே
காயங்கள் ஆற்றி செல்பவரே( எந்தன் ) 2
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
ஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே 2
பாவியாக என்னை மீட்க உமது
உயிரை அன்று தந்தீரையா
சில நொடியில் அதை மறந்தேனையா (நான் )