மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை – Maatchi Migum Motcha Nagar Magimai
- 1. மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் – அந்த
மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்2. பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே – அங்கு
பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே3. முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது
முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது4. ஜீவநதி பாயுகின்ற பட்டணமது – நிதம்
சித்திரமுடனிலங்கும் பட்டணமது5. நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது – நமது
நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது6. சாவு துக்கமேயில்லாத பட்டணமது – நிதம்
சங்கீதமுடனிலங்கும் பட்டணமது