மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril pirantha
மார்கழி குளிரில் பிறந்த மன்னவரே
மாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே
இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே
என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே
இவரே என் மீட்பர் பிறந்தாரே
இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே
1. முட்களின் நடுவில் மலராய்
காட்டு புஷ்பத்தின் நடுவில் லீலியாய்
நேசர் எனக்காய் இன்று உதித்தார்-2
இவரே என் மீட்பர் பிறந்தாரே
இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே
2.ஏழ்மையை போக்கும் கருவியாய்
எனக்காய் வந்தாரே தாழ்மையாய்
வானோர் மண்ணோர் போற்றும் தெய்வம்
இவரே என் மீட்பர் பிறந்தாரே
இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே