யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics
யார் பிரிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ
3. கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ
4. பழிச்சொல்லோ பகைமையளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
5. சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ
6. உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ