ராஜாதி ராஜன் பாருலக நாதன்- Rajathi Rjan parulaga nathan
ராஜாதி ராஜன் பாருலக நாதன் பிறந்த ஒரு ராத்திரி
தூதர்கள் கூட்டம் ஆனந்த கானம் விண்ணில் உயர்த்திடும் ராத்திரி
ஆம்பல் பூவிதழ் மெத்தை விரித்திடும் இடையர் சங்கீத ராத்திரி
பனியின் துளி கனம் நெற்றியில் ஏந்திய தும்பைப்பூவிதழ் விரியும் ராத்திரி
விழி இமைகள் விடிகையில் சாய்ந்துறங்கும் ராத்திரி
பெத்லகேமிலே ராக்கிளிகள் தூது போகுமோர் ராத்திரி
சாந்தமாய் ராத்திரி வெண்ணிலா உருகும் ராத்திரி.
1. பிள்ளையின் கொஞ்சலாம் மழலையை கேட்டொத்து கூவிய ராக்குயில் கூட்டத்தாரே
பனிப்போர்வை மறைவினில் மயங்கி அணைக்க பள்ளத்தாக்கில் வரும் நிலாவே
வால் தொட்டு மையிடும் அந்த நட்சத்திர சுந்தரிகள் கானம்
பாலன் பிறந்ததில் மங்களக்கீர்த்தனம் ஈரேழு லோகங்களில்
யூதேயா சுற்றிடும் சிற்றிளங்காற்றின் ரெக்கை சிறகிலேறி
தூதர்கள் கூட்டம் பாடுதே “குளோரியா! இம்மண்ணோர் எல்லோர்க்கும் சாந்தி”.
விழி இமைகள் விடிகையில் சாய்ந்துறங்கும் ராத்திரி
பெத்லகேமிலே ராக்கிளிகள் தூது போகுமோர் ராத்திரி
சாந்தமாய் ராத்திரி வெண்ணிலா உருகும் ராத்திரி.
2. பிள்ளை உறங்கவே புல்தொட்டில் ஆட்டும் அக்குளிர்மாதக்காற்றின் குளிரலையே
கடலேழு தாண்டியே விழியோர நிறைவிலே பரிசுகள் தந்தனர் மன்னர்களே
கண்டு வணங்கிய ஞானிகளும் வந்த மேய்ப்பர்களாம் சிலரும்
தாவீதின் வம்சமாய் பாரில் பிறந்ததை ஆனந்தம் கொண்டாடினர்
வானத்தில் பாலொளி எங்குமே தூவிய புன்சிரி தேன்நிலாவில்