லாபமான அனைத்தையும்-Laabamaana anaithayum
லாபமான அனைத்தையும் நஷ்டமென்று எண்ணுகிறேன்
நீர்தான் என் ஆதாயமே
நான் பார்க்கும் யாவையுமே மாயையென்று அறிகின்றேன்
நீர்தான் என் சுதந்திரமே
அர்ப்பணிக்கிறேன் என்னை
அர்ப்பணிக்கிறேன் இன்று
அர்ப்பணிக்கிறேன் இயேசுவே
உம் பாதத்தில் -2
1. என்னைக்கொண்டு நீர் செய்ய நினைத்தது
ஒருபோதும் தடை படாதைய்யா
2. என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
உம் நாமம் மகிமைக்காக
3. உம் நாமத்தில் யுத்தம் செய்வேன்
உம்மாலே ஜெயம் எடுப்பேன்
4. என்னால் அல்ல உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் கூடும்