வழியென்றால் எது அது ஜீவ வழி – Vazhi entraal ethu athu jeeva
வழியென்றால் எது அது ஜீவ வழி – Vazhi entraal ethu athu jeeva
1. வழியென்றால் எது? அது ஜீவ வழி
வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு
வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே
சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
ஜீவ அப்பமும் அவரே
2. ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி
ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு
3. ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம்
ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு
4. சத்தியம் என்றால் எது? அது தேவ சத்தியம்
சத்தியம் காட்டிடும் சற்குணன் யார்? அவர் இயேசு
5. அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம்
அப்பம் ஊட்டிடும் அன்னையும் யார்? அவர் இயேசு