வானத்தின் வாசலும் திறந்திட – Vanathin Vasalum Thiranthida
வானத்தின் வாசலும் திறந்திட – Vanathin Vasalum Thiranthida
வானத்தின் வாசலும் திறந்திட
வான்புறா வாழ்த்திட வந்திறங்க!
1.வானமும் வையகமும் வந்தினைய
வான்பிதா வாழ்த்துதல் வந்தொலிக்க
வான்மகன் இயேசுவும் யோர்தானிலே
வளைந்து குனிந்து மூழ்கியெழ!
2.யெகோவா தேவன் எழுந்தருள
ஆவியாம் தேவனும் அசைவாடிட
தேவ குமாரனும் நீதி செய்ய
திரியேக தேவனை தரிசனம் பார்!
3.நல் மன சாட்சியின் உடன்படிக்கை!
நன்மை பயக்கும் தேவாலோசனை
நேசத்தின் சின்னமாம் கீழ்படிதல்!
நேசிக்கும் பிள்ளையின் புதுசாட்சி!
4.விசுவாசம் வந்தபின் திருமுழுக்கு
விடுதலை பெற்றபின் வரும் ஒழுங்கு
முழு இதயத்துடன் விசுவாசித்தால்
முழுக்கினை பெற்றிட தடையுமில்லை!
5.தாமதிப்பதற்கும் தருணமில்லை
ஆமோதிப்போம் அவர்தாள் பணிந்து
ஞானமடைந்து ஸ்நானம் பெற்றிடுவோம்
நானிலத்தில் அவர் வழி நடப்போம்!