வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu
வானமே மகிழ்ந்து பாடு
பூமியே புகழ்ந்து போற்று
பிறந்தார் பிறந்தார்
பாவம் போக்க இயேசு பாலன்
மண்ணில் பிறந்தார் – இன்று
Happy Christmas 2
Happy Christmas Christmas
1.வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட
தாவீதூரிலே சத்திரத்திலே
சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார்
மேசியா-4
2. ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே
ஆக்கள் நடுவில் அன்னை மடியில்
அதிசய காட்சி ஒன்று கண்டனரே
மேசியா-4
3. சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே
சங்கீதம் எங்கும் ஒலிக்கட்டுமே
சமாதானம் நிலைத்திடவே
சத்தியத்தின் நாயகன் இன்று பிறந்தரே
ஆடுங்கள் பாடுங்கள்