வாரும் திருக் கண்ணாலே பாரும் – Vaarum Thiru Kannalae Paarum

Deal Score0
Deal Score0

வாரும் திருக் கண்ணாலே பாரும் – Vaarum Thiru Kannalae Paarum

பல்லவி

வாரும், திருக் கண்ணாலே பாரும், பரிசுத்தாவி தாரும்;
திருச் சபையைச் சேரும்; எம் ஏசு சுவாமி, வாரும்.

அனுபல்லவி

சீரும் செயலுமுள்ள தேவ திரித்துவமே,
தரிசித் தடி பணியும் பரிசுத்தமே,
கூறும் கருணாகரமே, யூத
கோத்திரமே, மெய்ஞானப் பாத்திரமே,
சேரும் சபை அறிவில் தேறும்படி உணர்த்தத்
திட்டமாய் இவர்க்குப் போதகப்
பட்டம் கட்ட இச்சமயம் வாரும்.

சரணங்கள்

1.ஒன்றும் அறியாப் பேதை, என்று உலகோர் சொன்ன
உத்தமர் ஈராறு பேரை இத்தரையினில்
சென்றுபதேசம் செய்ய என்றும் அப்போஸ்தலராய்த்
தேற்றியே ஆவியை அவர்க் கூற்றிய தேவா,
இன்றும் அவர்போல் உமக் கென்றும் ஊழியம் செய்ய
இவரை, உம் தாசனாகச் சபையினில் வைக்கவும்

2.மந்தை ஆடுகளும் மெலிந்’திரை நீரின்றி,
மலைகள் காடுகளினில் அலையும்; ஐயோ!
முந்த நரி ‘ கோனாய் நுழைந்து குட்டிகளையும்
முடுக்கி எங்கும் சிதற அடிக்கும்; ஐயோ!
விந்தைப்புல் மீதோட்டி நிறைந்த தண்ணீரிற் காட்டி,
மேய்க்க உம் தாசனை ஞான மேய்ப்பனாக ஏற்படுத்த

3.புத்தி, மிகுந்த தேவபக்தி, பொறுமை, தயை
புனிதம், ஜெபத்தியானம், பிறரில் அன்பு,
சத்யம், நீதி, இரக்கம், மெத்தவும் பவப் பயம்,
தாழ்மை, இச்சை அடக்கம், கீழ்மை அகற்றல்
சுத்த சற்குணம், இவை நித்தம் உன் தாசனிடம்
தோன்றச் செய்து குருவாய் ஊன்றி வையும் தயவாய்

Vaarum Thiru Kannalae Paarum song lyrics in english

Vaarum Thiru Kannalae Paarum Parisuththavi Thaarum
Thiru sabaiyai Searum Em Yesu Swami Vaarum

Seerum Seyalumulla Deva Thirithuvanae
Tharisithadi Paniyum Parisuththamae
Koorum Karunakaramae Yutha
Kothiramae Meignana Paathiramae
Searum Sabai Arivul Thearumpadi Unarththa
Thittamaai Evarkku pothaga
Pattam Katta Etsamayam Vaarum

1.Omtrum Ariyatha Peathai Entru Ulagoar Sonna
Uththamar Eeraru Pearai Eththaraiyinil
Sentrupatheasam Seiya Entrum Apposthalaraai
Theattriyae Aaviyai Avar Kottriyae Deva
Intrum Avar Pola Umakentrum Oozgiyam Seiya
Evarai Um Thanasanga Sabaiyinil Vaikkavum

2.Manthai Aadukalum Melinthirai neerintri
Malaigal Kaadukalinil Alaiyum Aiyo
Muntha Nari Konaai Nulainthu kuttikalaiyum
mudukki Engum Sithara Adikkum Aiyo
Vinthaipul Meethotti Nirantha Thannerir Katti
Meikka Um Thasanai Gnana Meippanaga Yearpadutha

3.Puththi Miguntha Devabakthi Porumai Thayai
Punitham Jebaththiyanam Piraril Anbu
Sathyam Neethi Erakkam Meththavum Pava Bayam
Thaazhmai Etchai Adakkam Keezhmai Agattral
Suththa sargunam Evai Niththam Un Thasanidam
thontra Seithu Guruvaai Oontri Vaiyum Thayavaai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
      christian Medias
      Logo