வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி – Vaazhvu Thantheer umakku Nantri
வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி – Vaazhvu Thantheer umakku Nantri
வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி
பாதுக்காத்தீர் உமக்கு நன்றி
நன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம்
தொடரச் செய்தீர் நன்றி
உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்
என் மதில்கள் உம் முன்பு இருக்கச் செய்தீர்
ஏற்ற காலத்தில் நீர் செவி கொடுத்து
மீட்டுக்கொண்டீரே நன்றி
பசியும் தாகமும் இருந்ததில்லை
உஷ்ணம் வெயிலும் என்னை அணுகவில்லை
நீரின் ஊற்றண்டை நடத்திச் சென்று
மேய்ச்சல் காட்டினீர் நன்றி