வா வா பாவி அழைக்கிறார் இயேசு – Va va Paavi Azhaikiraaar yesu

Deal Score+3
Deal Score+3

வா வா பாவி அழைக்கிறார் இயேசு – Va va Paavi Azhaikiraaar yesu

பல்லவி

வா வா பாவி அழைக்கிறார் இயேசு
ஆவலாய் தம்மிடம் – ஆ ஆ ஆ

அனுபல்லவி

தேவ குமாரன் தானே
தேடியுனை அலைந்தாரே
தேவ கோபம் வருமுன்னே
ஜீவன் பெறத் தடை என்ன? – வா வா

சரணங்கள்

1. தன்னிடம் வருவோர் எவரானாலும்
தள்ள மாட்டார் இயேசு
உன்னிடம் அன்போடவர்க்கு
உருக்கமும் உண்டு அதற்கு
உண்மையான அத்தாட்சி
தன்னைக் கொடுத்ததே சாட்சி – வா வா

2. வருந்தி நீ பாவப்பாரம் சுமப்பதைப்
பார்க்கச் சகிக்காமல்
வருந்தி அழைக்கிறார் இயேசு
வந்து அவரிடம் பேசு
திருந்தி மனங் கொண்டு வந்தால்
அறிந்திடுவாய் அவரன்பை – வா வா

3. கல்மனமோ கல்வாரியைக் கண்டும்
கரையாதோ உன் உள்ளம்
நில் சிலுவையண்டை சற்றே
நீசக் கோலம் தான் உற்றே
நீசன் உன்னையே மீட்டாரே
பாசமாய் அழைக்கிறார் தாமே – வாவா

4. ஆனந்த பாக்கியம் நீ அடைந்திடுவாய்
அவர் பிள்ளையாகும்போது
கானம் இசைத்து நீ மகிழ்வாய்
கர்த்தரின் நாமம் புகழ்வாய்
தானங்கள் பலவுவே பெறுவாய்
வானவர் வரவில் இன்புறுவாய் – வா வா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo