முற்றுப்புள்ளி – MUTRUPULLI
(LYRICS)
“பல்லவி”
கருணை மறந்த உலகிலே
கடவுள் தேடிப்பார்த்தோம்
இருக்கும் கடவுள் யார் என்று
இங்கு காண்கிறோம்
“அனுபல்லவி”
தெய்வம் தந்த பூக்களை
நாங்கள் ஏந்தினோம்
பாரம் ஏதும் இல்லை
எங்கள் கைகளில்
“சரணம்”
கடவுள் வடிவில் நானோ
உங்கள் மடியிலே
அதையும் தாண்டி எதுவும்
இல்லை உலகிலே
தேடி சேர்த்த செல்வம்
நிலையில்லாதது
தேடும் எங்கள் வாழ்வில்
இல்லை ஒரு பிள்ளை என்ற நிலைமையானது
“சரணம்”
ஓல குடிசை ஒருநாள் ஒசரம் போகுமோ
கந்துவட்டியின் தீயில் பொசுங்கி போகுமோ
கவலை மறந்து வாழ்ந்தோம்
உந்தன் சிரிப்பிலே
வழியில்லாமல் போனோம்
நெஞ்சில் வலி கண்ணே இனி
இயேசுவே ஒளி
“பல்லவி”
சிறகு முளைத்த சிறுபிள்ளை
பறக்க தடை இல்லை
விடியல் யாருக்கும் தொலைவில்லை வானமே எல்லை
வரட்டும் நல்ல மாற்றங்கள்
இயேசுவின் வடிவிலே
தாங்கும் தோள்கள் கூடினால்
அனாதையை இல்லை
- என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/652456734956541




