
Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics
Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics
யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
இறைவா……. இறைவா……. (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)
அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தரவேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரவணைப்பாய் (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)
மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதைய்யா (2)
குணமதிலே மாறாட்டம்
குவலயம் தான் இணைவதெப்போ (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)
வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு
உனது மனம் இரங்காதோ (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே