Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை
Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை
1.ஆராயுமென் இதயத்தை இன்றே
சோதித்தறியும் எந்தன் உள்ளத்தை
தீய வழி என்னில் உண்டோ என்றே
பார்த்து என்னை விடுவித்தருளும்
உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும்
உம் வசனத்தால் என்னை தேற்றிடும்
பரம அக்கினியால் நிரப்பிடும்
உம் நாமம் உயர்த்த வாஞ்சிக்கிறேன்
என் வாழ்வினை உமக்களிக்கின்றேன்
திவ்விய அன்பால் என் நெஞ்சை நிரப்பும்
என் பெருமை என் சித்தம் இச்சையும்
உமக்கர்பணித்தேன் என்னோடிரும்
தூயாவியே என்னை உயிர்ப்பியும்
புதுவாழ்வின்றே என்னில் துவங்கும்
எம் தேவை யாவும் தருவேன் என்றீர்
தேவா உம் ஆசி வேண்டி நிற்கின்றேன்