Aavalaai Meetparandai Vaa- ஆவலாய் மீட்பரண்டை வா
பல்லவி
ஆவலாய் மீட்பரண்டை வா – நீ வா – நீ வா
சரணங்கள்
1. இரட்சகர் தானமதாம் – இரட்சை நீ சொந்தமாக்க
விரைவுடன் இயேசு பாதம் வா – நீ வா – நீ வா! – ஆவலாய்
2. எத்தனை நாளாக நீ எத்தனை இகழுவாய்?
கர்த்தர் அழைக்கும் சத்தம் கேள் – நீ கேள் – நீ கேள் – ஆவலாய்
3. பாவத்தாலழுந்தும் உன் பாவம் நீக்குவேன் என்ற
காவலன் பாதத்தை நீ சேர் – நீ சேர் – நீ சேர் – ஆவலாய்
4. லோகம், ஜடம், பிசாசும் ஆகுலமியற்றினும்
சோகமற நல்லாயனைப் பார் – நீ பார் – நீ பார் – ஆவலாய்
5. உன்னைத் தானே வெறுத்து உன் சிலுவை எடுத்து
உன்னதனருள் நம்பி வா – நீ வா – நீ வா – ஆவலாய்
6. பாவமன்னிப்புச் சமாதானமும் பரிசுத்தமும்
தேவனுறை மோக்ஷமும் நினை – நினை – நினை – ஆவலாய்
7. மனஸ்தாபம் விசுவாசம் தள்ளுதலாம் மூன்றும்
மனுஷர் இரட்சைக்கு வழி காண் – நீ காண் – நீ காண்! – ஆவலாய்