அகிலம் படைத்த ஆண்டவரே – Akilam Padaitha Aandavare lyrics
அகிலம் படைத்த ஆண்டவரே – Akilam Padaitha Aandavare lyrics
அகிலம் படைத்த ஆண்டவரே
அல்லும் பகலும் தொழுதிடுவேன் – 2
உம்மைப்போல் தெய்வம் ஒருவரில்லை
உம்மைத் தவிர தெய்வமில்லை – 2
1. எனக்காய் பாடுகள் பட்டிரே
எனக்காய் இரத்தம் சிந்தினீரே – 2
எனக்காய் சிலுவையை சகித்திரே – 2
எனக்காய் மரித்து உயிர்த்தீரே – 2
2. வானம் உமக்கு சிங்காசனம்
பூமி உமக்கு வாசஸ்தலம் – 2
வானங்களில் உயர்ந்த ஆண்டவரே – 2
உம்மை ஆராதிக்க என்னை பாத்ரனாக்கும் – 2
3. உன்னதத்தில் வாசம் செய்து
உமது அடியார்; ஜெபம் கேட்டீர் – 2
இத்தனை மகத்துவம் உள்ளவரே – 2
உம்மைப் போல வேரு தெய்வமில்லை – 2
4. சிங்க கெபியில் காப்பாற்றினீர்
அக்கினி சூளையில் உடனிருந்தீர் – 2
உண்மையாய் நோக்கி பார்ப்பவர்கள் – 2
ஒருபோதும் வெட்கபட்டதில்லை – 2
5. நோய்களை நீக்கி சுகம் தந்தீர்
பேய்களை போக்கி பெலன் தந்தீர் – 2
எப்போதும் எங்கள் உடனிருந்து – 2
ஆவியால் எங்களை நிரப்புகிறீர் – 2