Akkaraiyai Nokki – அக்கரையை நோக்கி
அக்கரையை நோக்கி செல்லும் விசுவாசியே
அலைகளை பார்க்கையிலே பயம் வேண்டாம்
காற்றையும் கடலையும் அமர்த்திடவே
காத்திடும் கர்த்தர் உன் படகில் உண்டு
விசுவாசக் கப்பலின் பயணத்திலே
விபரீதங்கள் உன்னை தாக்கினாலும்
சோர்ந்திடாதே மனம் பதறிடாதே
சேர்த்திடுவார் உன்னை பத்திரமாய்
என் சொந்த தேசம் இதுவல்லவே
என் புகலிடமும் இங்கில்லையே
அன்பரின் தேசம் நாடிடுவேன்
ஆயத்தம் செய்கிறார் ஸ்தலம் எனக்கு
நீதியின் கர்த்தரே அரசாளுவார்
நித்திய மகிழ்ச்சி அங்கிருக்கும்
நீதியின் வஸ்திரம் அளித்திடுவார்
ஜீவ கிரீடமும் தந்திடுவார்