
அக்கினிச்சூளையினில் – Akkini Choolaiyinil
அக்கினிச்சூளையினில் – Akkini Choolaiyinil
அக்கினிச்சூளையினில்
அன்று நடந்தவரே
ஆவியுமாய் உண்மையுமாய்
நமக்குள் வசிக்கின்றாரே (2)
எழும்பிப் பிரகாசி
உன்னுள் ஒளி வந்தது (4)
மனிதரின் மத்தியில் வாசம் செய்ய
மகிமையின் தேவன் மனுவானார் (2)
சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்தார்
தம் சாயலில் நம்மை மாற்றிடவே (2)
எழும்பிப் பிரகாசி
உன்னுள் ஒளி வந்தது (2)
இருளினில் வாழும் உலகத்திற்கு
இயேசுவின் ஒளியை வீசிடுவோம் (2)
அழியும் மாந்தர் மீட்படைய
நாம் மெழுகைப்போல ஒளி தருவோம் (2)
எழும்பிப் பிரகாசி
உன்னுள் ஒளி வந்தது (2)