Akkini Kaattru Veesuthae – அக்கினி காற்று வீசுதே
அக்கினி காற்று வீசுதே
ஆவியின் மழை இங்கு பொழிகின்றதே
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பாடி உம்மைத் துதிக்கையிலே
அசைவாடும் ஆவியே
அனல் மூட்டும் தெய்வமே
அசைவாடும் ஆவியே
என்னை நிரப்பும் தெய்வமே
1.தாகமுள்ள அனைவருக்கும்
ஜீவத் தண்ணீர் தருபவரே
நீரோடைக்காக ஏங்கும் மானைப்
போலதாகங்கொண்டுள்ளேன் – அசைவாடும்
2. கழுகு போல் பெலனடைய
கர்த்தரே காத்திருக்கிறேன்
சாட்சியாய் நான் வாழ்ந்து
உம்மையே அறிவித்திட -அசைவாடும்
3.வறண்ட நிலம் என்மேல்
ஆறுகளை ஊற்றுமையா
ஜீவ நதியாய் பாய்ந்து
தேசத்தை வளமாக்கணும் -நான் -அசைவாடும்
4. உலர்ந்த எலும்புகள் போல்
உயிரற்ற என் வாழ்க்கையில்
ஆவியை ஊற்றுமைய்யா – உம்
ஆலயமாய் மாற்றுமைய்யா -அசைவாடும்