அழகாய் நிற்கும் யார் இவர்கள் – Alagai Nirkum Yaar Ivargal
அழகாய் நிற்கும் யார் இவர்கள் – Alagai Nirkum Yaar Ivargal
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் போற்களத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
சரணங்கள்
1. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்
2. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போல் நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்
3. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே — அழகாய்