Alankaara vaasalaalae- அலங்கார வாசலாலே

Deal Score0
Deal Score0

1. அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )
தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )
ஆத்துமத்தில் பூரிப்பேன்
இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )
மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ).

2. கர்த்தரே, உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்
நீர் இறங்கும்போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்.
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.

3. பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.

4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்.

5. விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்,
மெய்வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே.

6. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்
நீர் இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே
தாரும் ஜீவ பானத்தை
தீரும் பசிதாகத்தை.

1.Alankaara vaasalaalae
Kovilukkuzhl pokirom;
Thaeva veetin nanmaiyaalae
Aathumathil pooripaen;
Ingae theiva samukam,
Mei vezhlicham, paakkiyam.

2.Kartharae, ummandai vantha
Ennandaikku vaarumaen.
Neer irankkum pothaanantha
Inbathaal makizhluvaen.
Ennuda ithayamum
Thaeiva sthalamaakavum.

3.Payathil ummandai saera,
En jeyam pukazhlchium
Nalla paliyaaka aaera
Umathaaviyai kodum.
Thaekam aaviyaavaiyum
Suthamaakkiyaruzhlum.

4.Nalla nilathil vizhluntha
Vidhai payiraakumae;
Naanum avarae mikuntha
Kanikazhlai tharavae,
Vasanathai kaakka neer
Eevazhlika kadaveer.

5.Visuvaasathai vidaamal
Athil palappadavum,
Orukkaalum thavaraamal
Ummaithaan pin sellavum,
Meivezhlichathai neerae
Ennil veesum kartharae.

6.Sollum, kartharae, naan kaetpaen
Neer ippazhl nilathilae
Peiyapannum manna serpaen
Nalthiyaanathudanae;
Thaarum jeeva paanathai,
Theerum pasithaakathai.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo