Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே
Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே
அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே
ஆண்டவரின் தாயானவளே
தாழ்ச்சியுடன் உம்முன் செபிக்கின்றோம்
அருள்நிறை செபமாலை சொல்கின்றோம் – (2)
வேளை தாயே ஆரோக்கிய மாதவே
அண்டியே வந்தோம் அருள்புரிவாயே – (2)
தனிமையில் வாழ்பவரின் அடைக்கலம் நீ
அடிமையாய் இருப்பவரின் விடியலும் நீ
கடவுளின் அருளை கண்டடைந்தாய்
மக்களை நலனால் நிரப்பிடுவாய்
படைப்புக்களின் தாயே எமை படைத்தவனின் மாண்பே
படைப்பின் தாயே படைத்தவன் மாண்பே
அன்பே ஆரோக்கியமே எம் ஆண்டவரின் தாயே (வேளை)
பாலையில் உழைப்பவரின் காவலும் நீ
வறுமையில் தவிப்பவரின் உயர்வும் நீ
இறைவனை மனிதனாய் மாறச்செய்தாய்
உள்ளத்தை அருளால் நிறையசெய்வாய்
அழிவில்லா அன்பே அனைத்துலகின் மீட்பே
அழிவில்லா அன்பே அனைவரின் மீட்பே
அன்பே ஆரோக்கியமே எம் ஆண்டவரின் தாயே (வேளை)