Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து
Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து
அம்மாவை எதிர்பார்த்து
அப்பாவை எதிர்பார்த்து
வாழ்ந்தது போதும் பா
இயேசப்பாவ எதிர்பார்த்து
வாழ கூடிய கிருப தாங்கப்பா
கிருப தாங்கப்பா – எனக்கு
கிருப தாங்கப்பா
யோசேப்பு கூட இருந்தது போலாம்
என் கூட இருந்திடுங்க
தாவீது கூட நடந்தது போல
என் கூட நடந்திடுங்க
ஆகாரின் அழுகுரல் கேட்டது போல
என் ஜெபத்தை கேட்டிடுங்க
லீதியாளின் இதயத்தை திறந்தது
போல கண்கள திறந்திடுங்க –
மோசே கூட பேசியது போல
என் கூட பேசிடுங்க
ஏனோக்கு கூட வாழ்ந்தது போல
என் கூட வாழ்ந்திடுங்க
– கிருப தாங்கப்பா