அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney

Deal Score0
Deal Score0

அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே!
இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே!
சரணங்கள்
1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன்
துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்!
சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன்,
சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனே
பரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற்
2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானே
என்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே;
உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே!
வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!
அரும் போதனே! என தரணே – அன்பிற்
3. தேற்றரவாள னெனில் தினம் வசிப்பாரே?
ஆற்றல் செய் தெந்தனை அணைத்துக்கொள்வாரே!
போற்ற என் னகம் தேவ வீடாக்குவாரே!
புண்ய மிது எனது புகழ்ச்சி! மன மகிழ்ச்சி!
இல்லை இகழ்ச்சி! இதென் சாட்சி! – அன்பிற்
4. தேவ ராஜ்ய மெந்தன் சொந்தமதாமே!
பாவி எனக்கு வந்த மா பங்குதாமே!
ஜீவ நாதனோ டங்கு சுகித்திருப்பேனே!
ஆவலா யங்கு வர நானே! அருள் கோனே!
என் சீமானே! நீ தானே! – அன்பிற்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo