Anbulla Enyesu – அன்புள்ள என்னேசு
பல்லவி
அன்புள்ள என்னேசு நீரென் அருளுறவாமே!
அருளுறவாமே! என தரும் மகிழாமே!
சரணங்கள்
1. உந்தன் கிருபைதனையே உண்மையாய்ப் பற்றினேனையா!
எந்தநாளும் உமது சேவை யான் செய்வேன் மெய்யே! – அன்பு
2. நம்பிக்கையால் காக்கப்பட்டு நானுன் பெலனையும் பெற்று
தம்பிரானுனில் வாழ்கிறேன் தயக்கமே யற்று! – அன்பு
3. உள்வினையால் உருக்கப்பட்டேன் உன்னருளால் கழுவப்பட்டேன்;
கள்ளப் பேயோடமர் புரிந்து கனஜெயம் பெற்றேன்! – அன்பு
4. வாரும் கிறிஸ்தேசு நாதா வந்தென்னுள்ளில் தங்கும் போதா!
சீரடைந்தேனென்று சாட்சி சொல்லச் செய் நீதா! – அன்பு