
அன்புருவாம் எம் ஆண்டவா – Anburuuvaam Em Aandava Lyrics
அன்புருவாம் எம் ஆண்டவா – Anburuuvaam Em Aandava Lyrics
1.அன்புருவாம் எம் (ன்) ஆண்டவா,
எம் ஜெபம் கேளும், நாயகா;
நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
பாங்குடன் கட்ட அருளும்.
2.வாலிபத்தில் உம் நுகமே
வாய்மை வலுவாய் ஏற்றுமே,
வாழ்க்கை நெறியாம் சத்தியம்
நாட்ட அருள்வீர் நித்தியம்.
3.அல்லும் பகலும் ஆசையே
அடக்கி ஆண்டு, உமக்கே;
படைக்க எம்மைப் பக்தியாய்
பழுதேயற்ற பலியாய்.
4.சுய திருப்தி நாடாதே,
உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
வேண்டாம் பிறர் பயம் தயை,
வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.
5.திடனற்றோரைத் தாங்கிட,
துக்கிப்பவரை ஆற்றிட;
வாக்கால் மனத்தால் யாரையும்
வருத்தா பலம் ஈந்திடும்.
6.எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
தீங்கற்ற இன்பம் தேடிட,
மன்னிக்க முற்றும் தீமையை
நேசிக்க மனு ஜாதியை (மனுக்குலத்தை )
Anburuuvaam Em Aandava Lyrics in English
1.Anburuuvaam Em(n) Aandava
Em Jebam Kealum Naayaga
Naangal um Rajjiyam Aandaandum
Paangudan Katta Arulum
2.Vaalipaththil Um Nugamae
Vaaimai Valuvaai Yeattrumae
Vaazhkkai Neariyaam Saththiyam
Naatta Arulveer Niththiyam
3.Allum Pagalum Aasaiyae
Adakki Aandu Umakae
Padaikka Emmai Bakthiyaai
Palutheayattra Paliyaai
4.Suya Thirupthi Naadaathae
Um Theerppai Muttrum Naadavae
Veandaam Pirar Bayam Thayai
Veeramaai Pin Selluvom Ummai
5.Thidan Attrorai Thaangida
Thukkippavarai Aattrida
Vaakkaal Manathaal Yaaraiyum
Varuththaa Balam Eenthidum
6.Elithaam Vaaxhkkai Yeangida
Theenkattra Inbam Theadida
Mannikka Muttrum Theemaiyai
Neasikka Manu Jaathiyai (Manukkulaththai)