அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai
1. அற்புத அன்பின் கதை
மீண்டும் சொல்லு இதை
ஆச்சரியமான அன்பு
நித்யமாய் உணர்த்துது
தூதர்கள் களிப்பாய் உரைத்தனர்
மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர்
பாவியே இதை நீ நம்பாயோ?
அற்புத அன்பின் கதை
பல்லவி
அற்புதம்! அற்புதம்!
ஆச்சரியமான அற்புத அன்பின் கதை
2. அற்புத அன்பின் கதை
அப்பால் நீ இருப்பினும்
ஆச்சரியமான அன்பு
இன்றும் அழைக்கிறது
கல்வாரி மேட்டிலிருந்து
கீழே தூயநதி மட்டும்
லோகம் உருவாகும் போதும்
இவ்வன்பின் அழைப்பு உண்டு
3. அற்புத அன்பின் கதை
அமைதி அளிக்கிறார்
ஆச்சரியமான அன்பு
எல்லா புனிதர்க்கும்
மேல் மாளிகை இளைப்பாறுதல்
நமக்கு முன்பே சேர்ந்தோருடன்
மகிழ்ச்சி கீதம் பாடிடுவோம்
அற்புத அன்பின் கதை