Arumai Dhayalanae Anbu Lyrics – அருமை தயாளனே அன்பு
Arumai Dhayalanae Anbu Lyrics – அருமை தயாளனே அன்பு
அருமை தயாளனே அன்பு என் ஏசுவே
அள்ள அள்ள குறையாம அன்பு வெச்சவரே
என் ஆயுள் முழுதும் உம் அன்பை எனக்கு தந்தவரே
அய்யா உம் அன்பு எனக்கு போதுமே
இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே-2
உம்மோட அன்பை நானும் புரியாம போனேனே
எங்க போயும் அந்த அன்பு கிடைக்கல
அந்த அன்பை நானும் தெரியாம போனேனே
எங்க தேடியும் அந்த அன்பு தெரியல
அந்த அன்பு கிடைக்கல அது எனக்கு தெரியல -2
அந்த அன்பை மட்டும் எனக்கு இங்க கொஞ்சம்தாங்கப்பா
அந்த அன்பு இல்லன்னா நானும் ஒன்னும் இல்லப்பா-2
வாழ்வை ஆதாரமாய் வழிவகுத்த தெய்வமே
வழிகாட்ட எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
வளமாய் நானும் இங்கே வாழச்சொல்லி தந்தவரே
வாழ்வு கொடுக்க இங்கே யாரும் இல்லப்பா
ஒரு வாழ்வு கிடைக்கல ஒரு வழியும் தெரியல-2
இங்கு வாழ மட்டும் எனக்கு நீங்க சொல்லி தாங்கப்பா
வாழ்க்கை எல்லாம் இனிமே அது உமக்கு தாங்கப்பா-2
ஐயா உம் அன்பு எனக்கு போதுமே
இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே-2
அருமை தயாளனே அன்பு இயேசுவே
அள்ள அள்ள குறையாமல் அன்பு வெச்சவரே
என் ஆயுள் முழுதும் உம் அன்பை எனக்கு தந்தவரே-2