Athi Mangala Kaarananae – அதிமங்கல காரணனே

Deal Score+2
Deal Score+2
Athi Mangala Kaarananae – அதிமங்கல காரணனே
 
பல்லவி    

அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

சரணங்கள்  

1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல

2. முடி-மன்னர்கள் மேடையும்,
மிகு-உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்? — அதி-மங்கல

3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல

http://worldtamilchristians.com/saronin-rojavae-pallathaakin-leeleeyae/
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo