Athisaya Baalan – அதிசய பாலன்
Athisaya Baalan – அதிசய பாலன்
அதிசய பாலன் யாரிவரோ
அண்ட சராசரதிபனே
தித்திக்கும் தேவ திங்கனியோ
தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோ
திருசுதன் திருமைந்தனே
அதிசய பாலன் யாரிவரோ
அண்ட சராசரதிபனே
ஆபிரம் ஈந்த தாவிது வம்ச
யூதரின் ராஜனே
ஞானியர் தேடி இடையர் வியந்த
உந்தன் ஜனனமே
பாவ மோட்சன காரணனே
பாவியின் இரட்சகனே
பாரில் வாழ்ந்த பரிசுதனே
பரிகாரியே பரன் நீரே
மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த
விந்தையின் வேந்தனே
விண்ணகம் துறந்து புவியில் பிறந்த
புல்லனை பாலனே
தாழ்மை ரூபத்தில் வந்தவனே
தன்னையே தந்தவனே
அன்னை இன்ற தற்பரனே
என் நேசனே துணை நீரே