Azhaithadhum neer Alalva Lyrics – அழைத்ததும் நீர் அல்லவா
Azhaithadhum neer Alalva Lyrics – அழைத்ததும் நீர் அல்லவா
அழைத்ததும் நீர் அல்லவா -என்னை
நினைத்ததும் நீர் அல்லவா
தாயின் கருவில் என்னை உருவாக்கி
எனக்குரிய பெயரை வைத்ததும் நீரே – உம்
பணிக்கு என்னை தனியே ஒதுக்கி வைத்ததும் நீரே – நான்
போகுமிடம் எனக்கு குறித்து வைத்ததும் நீரே
I. மக்களினம் அத்தனைக்கும் இறைவாக்குரைக்க
மக்களிடம் இருந்து என்னை தேர்ந்தெடுத்தீரே
இத்தனைக்கும் இதுவரைக்கும் நான் சிறுபிள்ளை
எப்படி நான் பேசுவது அறிந்திடவில்லை – உம்
வார்த்தைகளை தொடுத்து -என் வாயினிலே கொடுத்து
அஞ்சாதே என்று வாரி என்னை அணைத்து
வாசல்வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தீரய்யா…
2. படைகளின் ஆண்டவரே பரிசுத்த தேவா
பாருலகம் நிறைந்துள்ளது உம் தயவாலே
யாரை அனுப்பிடுவேன் என்றுரைத்தவரே
இருக்கின்றேன் இருப்பவரே நான் என்றேனே
எரிதழலை எடுத்து என் உதடுகளை துடைத்து
பாவங்களை கழுவி, எனை மார்போடு தழுவி
உம் பணிக்காய் உருவாக்கி உருமாற்றி வைத்தீரய்யா