பதில் தேடி அலைகின்ற நண்பா – Bathil Theadi Alaikintra Nanba
பதில் தேடி அலைகின்ற நண்பா – Bathil Theadi Alaikintra Nanba
Lyrics.
பதில் தேடி அலைகின்ற நண்பா உன் கேள்விக்கு பதில் இங்கே உண்டு (2)
1.நிம்மதியை தேடி எதோ எதோ செய்தும் எந்த வித மாற்றமும் இல்லை உனக்கு(2)
பக்தி வழிபாடுகள் பயிற்சி செய்தலும் பதில் ஏதும் இல்லையோ என் நண்பனே, என் நண்பனே
கேள்விக்கு பதிலாய் பாவத்தை திர்க வந்தது யார் தெரியுமா(2)
அவர்தான் இயேசு , அவர்தான் இயேசு , அவர் மட்டுமே ஆண்டவர் (2) பதில் தேடி.
2.நஷ்டங்களும் தோல்விகளும் நடுங்கிடவே செய்வதால் வேறுவழி இல்லையோ என் நண்பனே (2)
துரத்திடும் வியாதியால் தீரா கடன்களால் தூங்கவும் முடியாமல் தவிக்கின்றாயோ, தவிக்கின்றாயோ.
வழியும் சத்யம் ஜீவனுமானவர் உனக்கொரு வழி இன்று திறந்திடுவார் (2)
உடல் சுகமாகும் மனம் புதிதாகும் சந்தோஷமாகவே வாழ்ந்திடலாம் (2) பதில் தேடி.
3.உதவாத உறவுகள் குறைகூறும் நண்பர்கள் ஏன் என்று புரியாமல் தவிக்கின்றாயோ (2)
நீ இருக்கும் நிலையிலே உன்னை ஏற்றுக்கொண்டு என் இயேசு உனக்கும் உதவி செய்வார் , உதவி செய்வார்
பாவங்கள் போக சாபங்கள் தீரா ஏசுவே என்று கூப்பிடு (2) தனிமையை மாற்றி வறுமையை நிக்கி எப்போதும் உன்னோடு இருந்திடுவார் (2) பதில் தேடி.