பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae
பயப்படாதே அஞ்சாதே
உன்னுடன் இருக்கிறேன்
திகையாதே கலங்காதே
நானே உன் தேவன் – 2
1. சகாயம் செய்திடுவேன்
பெலன் தந்திடுவேன் – 2
நீதியின் வலக்கரத்தால்
தாங்கியே நடத்திடுவேன் – 2
நீயோ என் தாசன்
நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2
வெறுத்து விடவில்லை
உன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே
2.வலக்கரம் பிடித்துக்கொண்டேன்
வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன்
அழைத்தவர் நான் தானே
நடத்துவேன் இறுதி வரை – உன்னை
3. உன்னை எதிர்ப்பவர்கள்
எரிச்சலாய் இருப்பவர்கள் – 2
உன் சார்பில் வருவார்கள்
உறவாடி மகிழ்வார்கள் – 2
4. மலைகள் நொறுக்கிடுவாய்
குன்றுகளை பதராக்குவாய்
போரடிக்கும் எந்திரம் நீ
கூர்மையான புது எந்திரம்