பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன்
உதவி செய்தீரே – என்
1.இதயம் மகிழ்ச்சியால்
களிகூர்கின்றதே -என்
இன்னிசைப் பாடியே
நன்றி கூருவேன்
2.ஆசீர்வதியுமே
பாரத தேசத்தை
விடுதலை தர வேண்டும்
உமது ஜனத்திற்கு
3.நல்மேய்ப்பர் நீர்தானே
நடத்தும் உம் பாதையில்
சுமந்து காத்திடும்
சுகம் தரும் தெய்வமே