பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae
பாடல் 14
பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே
மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார்
விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம்
மனுஷர்மேல் பிரியமே
1.வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே
வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே
அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி
வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே
2.வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே
வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே
தாரகையை தொடர்ந்தனரே
விந்தை பாலன் பாதம் பணிந்தார்
பொன்போளம் தூபம் படைத்தார்
மகிமை மகிமை ராயர் பணிந்தால்
3.மின்னிடும் தாரகை போல் வழிகாட்டி சென்றிடுவேன்
பாதை மாறி செல்வோரை பாதை காட்டி நடந்திடுவேன்
வழி சத்தியம் ஜீவன் இவரே
இரட்சிப்பின் தேவன் இவரே
இவரே இவரே வாழ்வு தருபவரே